Author: பதாகை
கல்நாகம் – இரு கவிதைகள்

ஒரு கல் – ஒரு கதை – இரு கவிதைகள்
I
தொல் நெடுங்காலத்தில்
டைனோசர்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தபோது
பனிவெளியின் ஆப்பிள் மர நிழலில்
கண்மூடி உறைந்து தவம் செய்த முனிவனை
சூழ்ந்து இறுக்கியது குருதிப் பசியடங்கா மலைப்பாம்பு.
“எதையும் இறுக்கும் திண்மை கொண்ட நீ
என்றும் இறுகிய கல்லாய்க் கிடவாய்,”
அழியா சொல்லுடன் காற்றில் கரைந்தான் முனிவன்,
முறுகி முயங்கிச் சில்லுகளாய் வெடித்தது கல்பாம்பு.
பன்னெடுங்காலம் கடந்த ஒரு வேனிற்கால மாலைப் பொழுதில்
மலைவேடன் கையில் அகப்பட்டது
கூர் முக்கோணத் துண்டு.
கல்பாம்பு உள்ளுக்குள் நகைத்தது,
“மூடன்! என்றென்றைக்கும் குருதியை சுவைக்கும்
வரம் அளித்துவிட்டான்”
– நரோபா
II
சூரியனின் கரங்களைத் தடுக்கும்
வானுயர்ந்த அடர் வனத்தின்
புதர்களைக் கோடரியால் வெட்டி
என் பாதையை நானே உருவாக்கிக்கொண்டு
இரை தேடிச் சென்றேன்
திடீரென்று புதர்களில் மறைவிலிருந்து
தாவிக் குதித்து என் முன் கால தேவன் போல் நின்றது
உக்கிரப் பார்வையும் மாசற்ற தேகமுமாய்
ஒரு வரிப்புலி
“ஆஆஆ” என்ற ஆக்ரோஷ ஒலி
என் தொண்டையைக் கீறிப் புறப்பட,
வலது கை வானுயர, வலது கால் மேலெழ,
இடது கால் உடலின் பாரத்தை தாங்க
வேகமாய் கோடரியை வீசினேன்
கோடரி மலைப்பாம்பாய்
புலியின் கழுத்தைக் கொள்ளும் நேரம்
தொலைவில் காலடி ஓசை கேட்க
இடப் பக்கம் திரும்பினேன்
காடு மாயமாய் மறைய
ஜன்னல் வழி வந்த சூரியக் கதிரில்
கூர்முனை பளபளக்க
பெட்டிப்பாம்பாய் அசையாமல்
கண்ணாடிக்கூண்டில் படுத்திருந்தது
கல்.
– – எஸ். சுரேஷ்
image credit: Metabauxite axe, The Metropolitan Museum of Art
முகத்தின் மறுபக்கம்

Karl Ove Knausgaard எழுதிய முகத்தின் மறுபக்கம் என்ற நீண்ட கட்டுரையின் தமிழாக்கப்பட்ட சிறு பகுதி: முழு கட்டுரையையும் இங்கே வாசிக்கலாம்
பின்னங்கழுத்தை நினைத்துப் பார்க்கும்போது முதலில் மனதில் தோன்றுபவை கில்லட்டின்கள், சிரச்சேதங்கள், மரணதண்டனைகள். இது சிறிது வினோதமாகவே இருக்கிறது – ஏனெனில் நாம் வாழும் தேசத்தில் மரண தண்டனைகள் விதிக்கப்படுவதில்லை – இங்கு கில்லட்டின்கள் இல்லை, எனவே நம் பண்பாட்டில் சிரச்சேதம் முழுமையாகவே ஒரு விளிம்புநிலை நிகழ்வாக இருக்கிறது. என்றாலும்கூட, பின்னங்கழுத்து என் நினைவுக்கு வரும்போது, வெட்டி வீசு என்று நினைத்துக் கொள்கிறேன். (more…)
புதிய உலகம் படைக்க அறிவியல் புனைவுகள் உதவுமா?
The Ascender என்ற தளத்தில் டாமியன் வால்டர் எழுதியுள்ள Rebuilding the World என்ற கட்டுரையின் மொழிபெயர்க்கப்பட்ட பகுதிகள்:
இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இங்கிலாந்தில் உள்ள கல்லூரி நகரான ஆக்ஸ்ஃபோர்டில், கற்பனையை மீட்டெடுக்கும் கதைகளைப் படைக்கும் நோக்கத்தில் சில எழுத்தாளர்கள் The Inklings என்ற குழுவாய் கூடினார்கள். அவர்களில் சி.எஸ். லூயிஸ் ஒருவர், அவரது நார்னியா நாவல்கள் ஒரு தலைமுறை குழந்தைகளை வசீகரிப்பதாக இருக்கும். ஜே.ஆர்.ஆர். டோல்கின் மற்றொருவர், இவரது மிடில் எர்த் இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கதையாக இருக்கும், இதைச் சிலர் ஏற்க மறுக்கலாம். தொழில் புரட்சி உலகில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தைத் தன் குழந்தைப் பருவத்தில் கண்ணுற்றவர் டோல்கின். ,மனித வரலாற்றில் முதன்முறையாக உலகெங்கும் வெடித்த பெரும் யுத்தத்தின் கொடூரங்களைத் தன் இளம் பருவத்தில் எதிர்கொண்டு உயிர்பிழைத்தவர் அவர். இந்த இரட்டை அனுபவங்களைக் கொண்டு அவர் நவீன உலகுக்கான புதிய தொன்மம் என்று தான் கருதிய ஒரு கதையை உருவாக்குவார். (more…)
மானுடம் குடியமர்ந்த கோள் – விபரீத துவக்கங்கள்

ஜைமினியின் சொற்கள் எனக்கு மிகவும் தேவையாயிருந்த நம்பிக்கை அளித்தாலும், நாங்கள் ஏன் அங்கு வந்திறங்கினோம் என்பதைக் கண்டறிய விரும்பினேன். இந்த உண்மையை அறிவதற்கான தடயம் ஏதேனும் கிட்டுமா? வானூர்திகளில் தேடத் துவங்கினேன், ஒரு வாரகால தீவிர தேடலில் வெற்றியும் பெற்றேன். ஜான் க்ரிப்பித் என்ற ஒரு அமெரிக்கனின் குறிப்பேட்டைக் கண்டெடுத்தேன். அதில் அவன் நாங்கள் எவ்வாறு இங்கு வந்திறங்கினோம் என்பதன் முழு விபரங்களையும் பதிவு செய்து வைத்திருந்தான்.
oOo (more…)