Author: பதாகை

அறையின் நடுவிலிருக்கும் யானை (ராண்டோ)

Elephant in the room

என்னைப் பார்த்துச் சிரிக்கிறது, கண்களைச் சிமிட்டி
வாலைச் சுழட்டிக் குதிக்கிறது, கொம்புகளை உயர்த்தி
கொடி பிடித்து நடக்கிறது, துதிக்கையை நீட்டி
மலர் சூட்டிக் கொள்கிறது, செவிகளை விசிறி
தரை அதிர நடக்கிறது, கெலித்த நகைப்பில்
வயர்கள் ஸ்பார்க் அடிக்கிறது – சானல்கள் அலற,
ஊரெல்லாம் கொதிக்க, அனைவரும் அறிய,
அறையின் நடுவிலிருக்கும் யானை
மறைந்திருக்கிறது, ஒவ்வொருத்தர் வீட்டிலும்

– அபிநந்தன் (more…)

கவியின் கண் 14 – நீல நெருப்பு கண்கள்…

 எஸ். சுரேஷ் –

முதலில் நம்மை உருவாக்கிய இந்த பேராசையிடமிருந்து
நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்
அதுதான் என்னை இந்த பாரின்
ஒரு மூலையில் உட்கார்ந்து,
பாதிரியின் பேரவாவுடன் காத்திருக்க வைத்திருக்கிறது,
குறிப்பிட்ட அந்த தருணத்திற்காக-
எதிரில் நீல நெருப்பு கொண்ட கண்கள்,
அபாயத்திற்கு பழக்கப்பட்ட அந்த கண்கள்,
முன்கணிக்கப்பட்ட பாதையில்,
என் கன்னங்களின் வெட்கச் சிரிப்பை கோரும்,
அவை கோரிய நாணமும் அவற்றுக்கு கிட்டும்.

– பாட்ரிசியா கவல்லி (more…)

மானுடம் குடியமர்ந்த கோள் : திரிகளைத் தொடர்தல்

– சிகந்தர்வாசி – 

பல பெரும்பணக்காரர்கள் பூமியிலிருந்து புறப்பட்டு வானூர்தியில் வரும் வழியில் பயங்கரமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பது என் ஆர்வத்தைப் பெருக்குவதாக இருந்தது. இவர்களில் எத்தனை பேர் பிழைத்துக் கொண்டனர்? பிராணவாயுப் பிரச்சினை எதனால் ஏற்பட்டது? விடையற்ற கேள்விகள்.

ஆங்காங்கே சிதறிக் கிடந்த வானூர்திகளில் என் தேடலைத் தொடர்ந்தேன். அதில் ஓர் கலத்தில் விண்வெளியாய்வு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் ஒரு பொறியியலாளர் நிகழ்த்திய உரையாடல் ஒன்றின் அச்சுப் பிரதி கிடைத்தது. (more…)

முடிவில் ஒரு தொடக்கம்

– ஸ்ரீதர் நாராயணன் –

neolithic_stone

 

“நியோலிதிக் காலம்… கி.மு. 5000-6000 அஹ்… என்ன ஒரு அற்புதமான வடிவமைப்பு பார்த்தாயா பையா?” நமச்சிவாயம் வியப்போடு கூவினார்.  நன்றாக மழமழவென தேய்க்கப்பட்டிருந்த முக்கோணக் கல்லை கண்ணுக்கு கிட்டே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சென்ற வாரம் கட்டிய எலெக்ட்ரிசிட்டி பில் எவ்வளவு ஆகியிருந்தது தெரியுமா என்று கேட்டால் பதில் சொல்லமாட்டார். நூற்றுபத்து ரூபாய் குறைகிறது என்று நான்தான் கைக்காசு போட்டு கட்டியிருந்தேன் என்று முப்பத்தேழுதரம் சொல்லியிருக்கிறேன். கவனிக்கவேயில்லை மனிதர். ஐயாயிரம், ஆறாயிரம், அறுபதினாயிரம் என்று வருடக் கணக்குகளைப் போட்டு உழப்பிட்டிருக்கிறார் பாருங்கள்.

எனக்கு இப்பொழுதே கால்கள் லேசாக கடுக்கத் தொடங்கியிருந்தன. (more…)

அலைகள் ஓய்கின்றன

– சிகந்தர்வாசி – 

கரைதட்டிச் சிதறுகின்றன, அலைகள்
திரும்பி வந்துத் தாக்குகின்றன, எனினும்
தண்ணீர் பழைய தண்ணீர்தான், பெருங்கடல்
என்றெதுவும் பின்பரப்பில் இல்லை- அலைகள்
அலைகள், அலைகள் மட்டும்தான்.

அக்கரை சேர்ந்துவிட்டான், அங்கே
புதிர்களின் விடியலைக் காண்கிறான்
காட்சிகள் வெறும் காட்சிகள்
மொழி ஒரு தூய ஒலி
பொருட்கள் வெறும் உருவங்கள், வண்ணங்கள்.
மனிதர்கள், மனிதர்கள் மட்டும்தான்k.

அவனைச் சுற்றியுள்ள உலகம்
உட்பொருளை மெல்ல இழக்கிறது, அவன்
ஒரு குழந்தையாகிறான், ஆனால்
அவன் கண்களில் வியப்பில்லை

எதற்காகக் காத்திருக்கிறான்?
தன் மரணத்தைச் சந்திக்கவா?
வாழ்வும் சாவும் அவனுக்கு
வெறும் வார்த்தைகள்
மரணம் அவனை நெருங்கும்போது
அதன் காலடியோசைகள் கேட்காது

எதுவும் விளங்காத இந்தத் தீவில்
அவன் தொடர்ந்து நடந்து செல்கிறான்
இதன் காற்று வெப்பத்தை இழப்பதில்லை
இதன் பருவங்கள் மாற்றம் அடைவதில்லை

அவ்வப்போது அலையொன்று
அவன் பாதங்களை அறைகிறது
ஒளிர்கின்றன அவன் கண்கள்,
கணப்போதில் ஒளியிழக்கின்றன

உதிர்ந்த நட்சத்திரம் போல்

அலைகள் மெல்ல ஓய்ந்து கொண்டிருக்கின்றன.