Author: பதாகை

ஒற்றைப் புன்னகை வெளிச்சம் – ராண்டோ

 

 

நடுநிசி நேரத்தில் நான் அங்கு வந்து சேர்ந்தேன்.
காரிருளில் மூழ்கி இருந்த அந்த பங்களாவுக்குள்
பணியாள் காட்டிய மெல்லிய டார்ச் ஒளியில்
தட்டுத் தடுமாறி பயத்துடன் சென்று கொண்டிருந்தவனுக்கு
பரவசம் அளித்தது பக்கத்து அறையில் இருந்த
சுந்தரியின் ஒற்றை புன்னகை

வெளிச்சத்தில் அடுத்த நாள் காலை பார்த்தபோதுதான்
தெரிந்தது அது ஒரு சிரிக்கும் கருங்குரங்கு பொம்மை.

– எஸ். சுரேஷ் (more…)

ஆனந்த அகவல் – மரணத்தின்முன் மனித நேயம்

கார்டியன் தளத்தில் ஆண்ட்ரூ ப்ரௌன் எழுதிய இந்த நூல் மதிப்பீடு மரணத்தின் முன் வாழ்வின் பொருள் என்ன என்பதை விவாதிக்கிறது, மறதியின் முன் நினைவின் இடமும்தான் என்ன என்ற கேள்விக்கும் இட்டுச் செல்கிறது.

Landscapes of the Metropolis of Death என்ற இந்த நூல் துண்டுக் காட்சிகளாகத் தன் கதையைச் சொல்கிறது. இதன் மையமாக நான் கருதும் காட்சி இது: ஒரு சிறுவன் தன் ஹார்மோனிக்காவில் ஏதோ ஒரு ட்யூனை வாசித்தபடி அமர்ந்திருக்கிறான். இன்னொரு சிறுவன் அவனிடம் வந்து நீ என்ன வாசித்துக் கொண்டிருக்கிறாய் தெரியுமா என்று கேட்கிறான். இல்லை என்கிறான் அவன். ஆறு மாதங்களுக்கு முன் ஒரு முகாமில் எனக்கு இது கற்றுக் கொடுக்கப்பட்டது, அந்த முகாம் இப்போது இல்லை. (more…)

ஒரு நாள் முடிகிறது

சிவா கிருஷ்ணமூர்த்தி

 IMG_1969

ஓரிரு வருடங்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நான் ஒரு வருடமாக காதன்பர்க்கில், ஸ்வீடனில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஒரு ராஜஸ்தானிய நண்பரின் ப்ளாட்டில் நானும் ஒண்டிக்கொண்டிருந்தேன்.

என்னுடன் இன்னொரு நபரும் ஒட்டிக்கொண்டிருந்தான். என்னை விட பல வருடங்கள் இளையவன் என்பதாலும் ஒரு வாஞ்சையாலும் அந்த ஆந்திரனை அவன், இவன் என்ற ஏகவசனம் அவ்வளவுதான்!

அதுவோர் இலையுதிர் காலம். மதியம் தாண்டியவுடன் காலம் ஸ்தம்பித்து நின்றுவிடும். முடிவே இல்லாத மாலை. அத்தனை வெளிச்சத்தை காலை மணி ஒன்பது என்றால் நம்பலாமே தவிர இரவு மணி ஒன்பது என்று சொல்லவே முடியாது. (more…)

பிராங்க் ஓ’ஹாரா – ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு கவிதைகள்

 

 

அட்லாண்டிக் இதழில் மிகா மாட்டிக்ஸ் எழுதிய கட்டுரையை இங்கே முழுமையாக வாசிக்கலாம் –

சில கவிஞர்கள் நம் பேச்சுமொழியை உருவாக்குகின்றனர். வேறு சிலர், தன்னிகழ்வும் தரிசனமும் வாய்க்கப்பெற்று, மொழியில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே வெளிப்படுத்தும் மொழிவழக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பிராங்க் ஓ’ஹாரா இரண்டாம் பகுப்புக்கு உரியவர்: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவரது லஞ்ச் கவிதைகள் பதிப்பிக்கப்பட்டபோது நாவலாசிரியர் கில்பர்ட் சொரண்டினோ இவ்வாறு எழுதினார்: இந்தக் கவிதைகள், “தீர்மானமாக ந்யூ யார்க்கின் joie de vivreஐக் கொண்டிருக்கின்றன: சற்றே நலிந்த, கசங்கிய, ஆனால் தற்போதுள்ள ‘பாணியை’ விட எப்போதும் ஒரு அடி உயரே உள்ள ஒருவகை மோஸ்தரில்”. (more…)

அன்பெனும் மழை – ராண்டோ

 

“மேகங்கள் கறுத்து மழை பெய்யாவிட்டால் என்ன?
நம் ஊரில் என்றும் பெய்கிறது அன்பெனும் மழை”
என்று முழங்கிக் கொண்டிருந்தார் பேச்சாளர்

அந்த வழியாக சென்றுகொண்டிருந்த
அழுக்கு வெள்ளை நாய் ஒன்று
அவரைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது

பேச்சை நிறுத்திவிட்டு அவர் நாயை முறைத்தார்
குரைப்பதை நிறுத்திவிட்டு நாய் அவரை முறைத்தது

நாய் ஒய்ந்துவிட்டதாக நினைத்து அவர் பேச்சை தொடந்தார்
நாய் மறுபடியும் கோபமாக குரைத்தது

கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்தார்
நாய் அவரைப் பார்த்து பலமாக சிரித்துக்கொண்டே
அங்கிருந்து ஓடி விட்டது.

ஒரு கையில் கல்லும்
மறு கையில் மைக்கும் வைத்துக் கொண்டு
பிரசங்கத்தை தொடர்ந்தார் பேச்சாளர்

(எஸ். சுரேஷ்) (more…)