Author: பதாகை

ஒரு மாதிரி வாழ்க்கை

– சிகந்தர்வாசி – 

 

 

 

அவன் நிறைய சம்பாதித்தான்- என்று
பேசிக் கொள்கிறார்கள், எவ்வளவு
என்று யாருக்கும் தெரியவில்லை

அவன் துவங்கிய கம்பெனியை, ஏதோ
ஒரு நிறுவனம் வாங்கிக் கொண்டது-
32 வயதில் வேலையை விட்டான்

ஜெயநகரில் ஒரு பார்க்கின் அருகில்
வீடு வாங்கிக் கொண்டான், தினமும்
மாலையில் கிரிக்கெட் விளையாடுகிறான்

பணம் இருப்பதாய் காட்டிக் கொள்வதில்லை
அக்கம்பக்கத்தில் இருக்கும் சிறுவர்கள்
விளையாட வருகின்றனர்.

அவன் எந்த இயக்கத்திலும் சேரவில்லை
எந்த இடத்திலும் பணம் போடவில்லை
எந்த சாமியாரிடமும் போகவில்லை

புதுப்புது ஊர்களைப் பார்க்கவில்லை
திருமணம்கூட செய்யவில்லை, எப்போதும்
தன் வீட்டில் ஓய்வாய் இருந்தான்

எப்போதாவது சினிமா போவான், அல்லது
டிவியில் ஸ்போர்ட்ஸ் பார்ப்பான், தினமும்
மாலையில் கிரிக்கெட் விளையாடுவான்

இது என்ன பிழைப்பு, என்று
நினைத்தார்கள், ஒரு லட்சியம்
இல்லாமல், குழந்தை குட்டி இல்லாமல்

வெட்டியாய் தின்பதும் தூங்குவதும்
தினமும் விளையாடுவதுமாய்
வாழ்வதில் யாருக்கு என்ன புண்ணியம்

என்று அக்கம்பக்கத்தில் பேசிக் கொண்டது
அவனுக்குக் கேட்டிருக்குமா, தெரியவில்லை,
ஆனால் ஒவ்வொரு நாளும் மாலை

ஐந்தரை மணிக்கு, மழை
பெய்யாத ஒவ்வொரு நாளும், கிரிக்கெட்
விளையாட வந்துவிடுகிறான்.

 

புகைப்பட உதவி: 3pointmagazine.gr

“இதை ஒரு-பொய்யும்-சொல்லாதிருத்தல் பாணி எழுத்து என்று அழைக்கலாம்” – டகேஷி ஹிராய்டா

வில் ஹேவார்ட்டின் இந்த பேட்டியின் முழு வடிவை பாம்ப் தளத்தில் வாசிக்கலாம்

வில் ஹேவார்ட்: ஆங்கில மொழிபெயர்ப்பில் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ள The Guest Catஐ என்னவென்று விவரிப்பீர்கள்? ஓரே சமயத்தில் அது டயரிக் குறிப்புகள் பலவும், கட்டுரை போலவும், ஏன் ஒரு கடிதம் போலவுமே இருக்கிறது.

டகேஷி ஹிராய்டா: அடிப்படையில் நான் ஒரு கவிஞன். கவிதை எழுதுபவன். ஆனால் விமரிசனங்களும் கட்டுரைகளும்கூட எழுதியிருக்கிறேன். நான் கவிதையில் சோதனை முயற்சிகள் மேற்கொள்கிறேன், அதன் பல்வேறு வடிவம் சார்ந்த சோதனை முயற்சிகளில் ஈடுபடுகிறேன். For the Fighting Spirit of the Walnut என்ற என் இரண்டாம் கவிதைத் தொகுப்புதான் ஆங்கில மொழிபெயர்ப்பில் முதலில் வெளிவந்திருக்கிறது. அது துண்டிக்கப்பட்ட வடிவில் எழுதப்பட்டது. ஆனால் The Guest Catல் அந்தப் பாணியை மாற்றிக் கொண்டேன். அதைவிட சரளமான உரைநடை பாணியில் எழுதினேன், இதுவும் முழுமையடையாத துண்டங்களாகதான் இருக்கிறது. சமகால இலக்கிய வடிவங்கள் குறித்து விமரிசனங்கள் எழுதிய காரணத்தால் நான் மேற்கொண்ட மாற்றங்கள் இவை. கவிதை அதன் வடிவம் குறித்த விமரிசனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும், உரைநடையையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். (more…)

கவியின் கண் – 13 “சூரியனின் இந்த மூன்றாம் கோளில்..”

 எஸ். சுரேஷ் –

 

 

வல்லூறுகள் என்றும் தாம் குற்றம் புரிந்ததை ஏற்பதில்லை
சிறுத்தைகளுக்கு நியாய அநியாயம் தெரிவதற்கில்லை
தாக்கும்போது பிரான்ஹாக்கள் வெட்கப்படுவதில்லை.
பாம்புகளுக்குக் கையிருந்தால், கறைபடாத கரங்களைக் காட்டும்.

நரிகளுக்கு வருத்தம் என்றால் என்னவென்று புரியாது.
சிங்கங்களுக்கும் உண்ணிகளுக்கும் பாதையில் தடுமாற்றமில்லை,
அவசியமென்ன, எது சரி என்று நன்றாகத் தெரிந்தபின்னே?
திமிங்கலங்களின் இதயங்கள் ஒரு டன் எடை இருந்தாலும்,
பிற அனைத்து வகைகளிலும் கனமற்றவை.

சூரியனின் இந்த மூன்றாம் கோளில்
மிருகத்தனத்தின் அடையாளங்களில்
சுத்தமான மனசாட்சிக்கே முதலிடம்.

– விஸ்லாவா ஸிம்போர்ஸ்கயா (more…)

ஒரு சினிமா மாஸ்டர்பீஸ் – ‘ஐடா’

டேவிட் டென்பி எழுதிய திரை விமரிசனத்தின் முழு வடிவை இங்கு வாசிக்கலாம் – நியூ யார்க்கர்.

அமெரிக்க திரைப்படங்களின் தொடர்ந்த அசைவுகளுக்கும் கட்டாயமான கட்ஷாட்களுக்கும் நாம் மிகவும் பழகிப் போயிருக்கும் காரணத்தால் ஐடா என்ற இந்த அருமையான, புதிய போலிஷ் மொழி திரைப்படத்தின் நிச்சலனம் ஒரு அதிர்ச்சியாய் வருகிறது. மௌனத்தையும் உருச்சித்திரத்தையும் (portraiture) இத்தனை வெளிப்பாட்டுத்தன்மையுடன் பயன்படுத்திக் கொள்ளும் வேறெந்த திரைப்படமும் என் நினைவுக்கு வருவதாயில்லை; இந்தப் படத்தின் பரவசமான கறார்த்தன்மை என்னை ஒரு திகைப்பு நிலைக்குக் கொண்டு சென்றது. நண்பர்களும் தங்கள் அனுபவமும் இது போன்றே இருப்பதாகச் சொல்கின்றனர்: திகைப்பில்லை எனில், கூர்மையான கவனக்குவிப்பும் மிகுந்த மனநிறைவும் நேர்ந்ததாகச் சொல்கின்றனர். கச்சிதமான இந்த மாஸ்டர்பீஸ் நறுக்கான வரையறையோடும் கணக்கு தீர்த்துக் கொள்ளுதலின் தீர்மானத்தோடும் இருக்கிறது- கோபமும் துக்கமும் ஒன்றாய் கலத்தலில் உள்ள கணக்கு தீர்த்தல். (more…)

மானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 2

– சிகந்தர்வாசி – 

நாங்கள் இந்தக் கோளில் குடியமர்த்தப்பட்ட சில காலத்துக்குப்பின் தொழில்நுட்பத்தைச் செலுத்தும் தீசலெண்ணெய் முதலான உள்ளீட்டுப் பொருட்கள் இல்லாது போயின. இந்த இழப்பைத் தொடர்ந்து எங்கள் சமுதாயம் அதுவரை கற்றிருந்த கல்வியின் பயனை இழந்தது.

விவசாயிகளும் வனவாசிகளுமே இத்தகைய மாற்றங்களால் தடுமாற்றமடையாதவர்களாக இருந்தனர். விவசாயிகள் தம்மிடமிருந்த விதைகளைக் கொண்டு தொடர்ந்து பயிர்ச் சாகுபடி செய்தனர். வனவாசிகள் இயற்கையை ஒட்டி வாழ வேண்டிய சூழலில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்ள எங்கள் அனைவருக்கும் பயிற்சியளித்தனர். மண்வளம் குன்றாதிருந்தது, பயிர்கள் செழித்தன. நாங்கள் கொணர்ந்திருந்த விலங்குகள் வனத்தில் பெருகின. வனவாசிகள் வேட்டையாடக் கற்றுத் தந்தனர். எங்கள் காலனி மெல்ல மெல்ல உணவுப் பற்றாகுறையிலிருந்து மீண்டது. “உணவைப் பொருத்தவரை நாம் தன்னிறைவை எட்டிவிட்டோம்,” என்று ஒரு மேலாண்மை நிபுணர், சுள்ளி பொறுக்கும்போது குறிப்பிட்டதில் உண்மை இல்லாமலில்லை. (more…)