எழுத்து

கை நழுவிய இராணி

கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

queen-missed

உண்மையில் இந்த கதையை நான் எழுதவில்லை. செந்தூரன்தான் எழுதினார். இரண்டாயிரத்து ஒன்பதில் இந்தக் கதையைப் பற்றி முதன்முதலாக நாங்கள் இருவரும் பேசினோம். அப்போது அவர் பத்திரிகையெல்லாம் நடத்திக் கொண்டு தீவிரமான செயல்பாட்டில் இருந்தார். இவர் அமெரிக்காவில் இருந்தபடி எடிட்டிங் பார்த்துக் கொள்ள, சென்னையில் பத்திரிகை பணிகள் நடந்து கொண்டிருந்தன. அச்சு உலகில் ஓரளவுக்கு கவனத்தை பெற்ற மாதாந்திரி பத்திரிகை அது..

‘கதையெல்லாம் நூறு பேரு எழுதறான்…. நீ வேற ஏதாச்சும் கட்டுரை எழுதேன். இங்க நடந்திட்டிருக்கிற செஸ் டோர்னமெண்ட் பத்தி ஒரு ஃபீச்சர் பண்றோம். நீயும் செஸ் பத்தி எழுதேன்’ என்றார். சொன்னது போல ஃபிலடெல்ஃபியாவில் நடந்த CCA டோர்னமெண்ட்டை முன் வைத்து பிரமாதமான கட்டுரைகள் எல்லாம் வந்திருந்தன. கேடா காம்ஸ்கியோட ஒரு நேர்முகம், தமிழகத்தின் லேட்டஸ்ட் கிராண்ட் மாஸ்டர் டி. சந்தோஷ் பற்றி அவருடைய அப்பா எழுதின கட்டுரை, வீடில்லாமல் ஃபிலடெல்ஃபியா ரூஸ்வெல்ட் பார்க்கில் வாழ்க்கை நடத்தும் செஸ் மாஸ்டர் டாம் மர்ஃபி பற்றி ஒரு கட்டுரை என்று பலதும் வந்திருந்தன. (more…)

நவீனத்துவம், மாயம், புனைபடுதல் – 1

-பீட்டர் பொங்கல்-

(சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சில சுதந்திரங்கள் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை இது. கலைச்சொற்களின் தமிழாக்கமும் நம்பத்தகுந்ததாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பிழை எது, சரி எது என்பதை சுயமாய்ச் சிந்தித்தறிய தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. விஷயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், Michael Saler எழுதிய மூலக்கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம் )

நவீனத்துவம் மற்றும் மாயம் குறித்து நிகழ்த்தப்படும் உரையாடல்களின் பின்னணியில் ஓங்கி நிற்கும் இறுகிய முகம் மாக்ஸ் வெபருக்கு உரியது. அதைவிடச் சற்றே மகிழ்ச்சியான முகம் கொண்ட சார்லஸ் டெய்லரும் அங்குண்டு. மலர்ந்த முகம் கொண்டவரும் உண்மைகளை அப்பட்டமாய் பேசுபவரும், கரிக்கோல் ஏந்தியிருப்பதாய் குற்றம் சாட்டப்படுபவருமான லுட்விக் விட்கென்ஷ்டைனும் இவர்களுடன் இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

இது நினைத்தே பார்க்க முடியாத தேர்வு என்ற எண்ணம் எழலாம். காரணம், விட்கென்ஷ்டைன் மாயத்தன்மை குறித்து அதிகம் எழுதியதில்லை. மேலும், மொழியின் பிழை புழக்கத்தால் ஏற்பட்ட மயக்கங்களை, தத்துவத்துறைக் கருவிகளைக் கொண்டு கலைத்து வசியமிழக்கச் செய்தவர் என்றுதான் அவரைப் பற்றி பெரும்பாலும் கருதப்படுகிறது. அவரே எழுதியதுபோல், “மொழியினால் ஏற்பட்ட நம் அறிவு மயக்கத்துக்கு எதிரான போராட்டம்தான் தத்துவவியல்” “Philosophy is a battle against the bewitchment of our intelligence by means of language”). (more…)

கார்ல் ஹையசனின் நகைச்சுவைக் குற்றப்புனைவு

அஜய் ஆர்

பதாகையில் மொழிபெயர்க்கப்பட்ட “நகை எனும் மெய்ப்பாடு” என்ற பதிவின் மூல கட்டுரை, இவ்வாறு ஆரம்பிக்கிறது- “When moral or political decisions are at stake, we often make use of catch-phrases drawn from a repertoire of available drama and literature. For we understand that both our actions and how they are perceived depend on how we frame them. Comedy, of all genres, appears to be the one we covertly use all the time without, meanwhile, fully appreciating its ability to portray and explore the intensity and integrity of our interactions with others. “

இயன் ரேங்கின் (Ian Rankin) குற்றப்புனைவுகள் பற்றிப் பேசும்போது “But the best crime fiction today is actually talking to us about the same things big literary novels are talking about. They are talking about moral questions, taking ordinary people and putting them in extraordinary situations, and saying to the reader, “How would you cope in this situation?” என்கிறார். அன்றாட வாழ்வில் “தார்மீகத்தை” கடைபிடிக்க முயலும்போது மனிதனுள் எழும் கேள்விகள், அவன் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசும் இந்த இந்த இரண்டு கூற்றுகளும் ஒரே புள்ளியில் இணையும்போது நகைச்சுவைக் குற்றப்புனைவு (comic crime fiction) என்ற வகைமை உருவாகிறது. (more…)

ரெண்டாம் காலம்

நந்தா குமாரன்

 

வானவிழ் மழைவழி
தரையுமிழ் மரவடி
மஷ்ரூம்கள் மலர்ந்த
விழிஎழும் பாதையில்
மழைஉளி செதுக்கிய
மேகவிக்ரஹ பிரதிஷ்டை
காண வந்தவன் கண்கோப்பைகளில்
ரஷ்ய சாராயமும் இந்திய இளநீரும்
ப்ராகலி மேன்சூரியன் பொரியல் தின்னும்
அவன் மாமனிதன் எழுதும் காவியத்தில்
இயந்திரக் குப்பை அள்ளும்
மனித ஸ்பரிசம் மறந்த கைகள்
மடக்கி நீட்டிக் காட்டும்
ஆகாயம் மூச்சு விடும் அதில்
“விண்னெழும் புள்ளு”

காத்திருக்கும் கவிதை

எஸ். சுரேஷ்

cat
எதுகையும் மோனையும் கச்சிதமாய் அமர
தங்குதடையின்றி வார்த்தைகள் பிரள
அகத்தின் ஆழத்தை வாக்கியங்கள் தொட
மனிதனுக்கு புதுவழி காட்ட
ஒரு கவிதை என்னுள் தோன்றியது

மனதில் இருந்த கவிதை மறைவதற்கு முன்
கணினியில் பதித்துவிட விரைந்தேன்

என் லெனோவோ திங்க்பாட் மேல் தூங்கிக்கொண்டிருந்த
பூனை எழுந்து என்னைப் பார்த்து முறைத்தது

பூனைக்கு பால் எடுக்க நான் சமையலறை சென்றேன்

 

image credit – Literary Cats