அப்படியான
கொடுத்து வைத்திராத லாட்டரித் தாள்கள் காற்றில் எறியப்படும் ராக்கெட்டுகளாய் ஆகிவந்த காலம் அது – வீணாகும் துண்டு லாட்டரிகள் பொறுக்கி எடுத்து தெருவைக் கடப்பேன் நிதானமாக நின்று எதிரில் பார்த்தபடி கைகளிலிருந்து குறி வைப்பேன் – வாகனம் கடக்காத நேரத்தில்
விர் விர்ரென்று
செலுத்திய கூரான காகித ராக்கெட்டுகள் வெயிலுக்காக கடை மேல் போர்த்தப்பட்ட கோணிப்பையின் துவாரங்களைத் தாக்கும் – மிட்டாய்கள் நட்சத்திரங்கள் போல
மினுமினுக்க வண்ண பலூன்கள் மிளிர குறுகலான இடத்தில் அமர்ந்துகொண்டு கடையின் கீழ் ஒளித்து அடுக்கி வைத்திருக்கும் பீடிக்கட்டுகளும் சிகரெட் பெட்டிகளும் தெருமார்களிடம் ரகசியமாக ஒப்படைப்பான் அவன் – என்னுடைய ராக்கெட்டுகள் தலைக்கு மேல் சென்றாலும் ஒருபோதும் அவை அவனை நெருங்குவதோ காயப்படுத்துவதோ இல்லை – இருந்தாலும் அவனுக்குள் பயம் – அவன் என்னை விரட்டுவான் சத்தம் போட்டு ஏசுவான்
என்றாலும் அவன் மீதான என் ராக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன
எதுவரை என்றால்
ஒருநாள் கொள்ளிட நீர் மண் இழுத்துக்கொண்டு அவனைக் கரைசேர்த்த பொழுது
கொலையுணர்வு கலந்த
என் ராக்கெட் தாக்குதல்கள்
நினைவில் தட்டிய வரை
எழுத்து
கவிதையும் கேள்வியும்
கடந்த ஆறு வாரங்களாக றியாஸ் குரானா அவர்கள் பதாகையில் வாரம் ஒரு கவிதையும் எழுதி வந்திருக்கிறார். பதாகைக்குப் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார், பதாகையைப் புதிய தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
கவிதைகள்-
தோன்றி மறையும் வர்ணங்களாலான படுக்கையறை ஒவியம்
காத்திருப்பவருக்கும் காத்திருக்கச் செய்தவருக்கும் இடையில் பெய்த மழை
கட்டுரைகள்-
‘கவிதை மொழியைப் பெருக்குகிறது’
கவிதையின் நகர்வுகள் – இனி என்ன?
கவிதை குறித்த அவரது கருத்துகள் மாறலாம், கவிதையின் வடிவம் மாறலாம், ஆனால் என்றும் மாறக்கூடாத நற்பண்புகள் அவரிடம் உள்ளதை அண்மைய மாதங்களில் உணர்ந்தோம். உடல்நிலை உட்பட பல பிரச்சினைகளுக்கு இடையே பதாகையில் எழுதிய திரு றியாஸ் குரானா அவர்களுக்கு நன்றிகள்.
எஸ் சுரேஷ் – தாக்கம் ஏற்படுத்திய பத்து கவிதை நூல்கள்
– எஸ். சுரேஷ் –
“கவிதை வாசிப்பதுதான் நல்ல இலக்கிய ரசனையை வளர்த்துக் கொள்ளும் வழி|”- ஜோசப் பிராட்ஸ்கி
புத்தகங்கள் எப்போதும் அந்தரங்கமானவை, ஒருவர் தேர்ந்தெடுக்கும் “சிறந்தவை” வேறொருவரின் தேர்வைப் போலிருக்காது. கவிதை விஷயத்தில் இதற்கான வாய்ப்புகள் மேலும் குறைகின்றன. பல கவிஞர்களை நான் ரசித்து வாசித்திருக்கிறேன், ஆனால் வெகு சிலரிடம் மட்டுமே மீண்டும் மீண்டும் திரும்புகிறேன். இந்தப பட்டியல் நான் திரும்பத் திரும்ப வாசிக்கும் கவிதை நூல்களின் பட்டியல். இதில் மாபெரும் கவிஞர்கள் சிலர் இல்லாதிருக்கலாம், ஆனால் எனக்குப் பிடித்தவர்கள் இவர்கள்:
1. குறுந்தொகை
சங்கக் கவிதைகளில் அகம், புறம் என்ற இரு பிரிவுகள் உண்டு. அகக்கவிதைகளின் மிகச் சிறந்த தொகுப்பு குறுந்தொகை. அகநானூறு சற்றே நெடியதாக இருக்கிறது, ஐங்குறுநூறு மிகக் குறுகியதாக இருக்கிறது. குறுந்தொகைதான் கச்சிதமான உருவம் கொண்டிருக்கிறது. இந்தக் கவிதைகளில் காணப்படும் நவீனத்துவம் என்னை மிகவும் இம்ப்ரெஸ் செய்ததால் இவற்றை ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். ஏறத்தாழ 70 கவிதைகளை ஆங்கிலப்படுத்தினேன், அவற்றில் 13 சாகித்ய அகாதெமி பிரசுரமான ‘Indian Literature’ என்ற பத்திரிக்கையில் பிரசுரமாயின. தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் இவை. ஏ கே ராமானுஜம் சரியாகவே சொன்னதுபோல், இவற்றைக் காட்டிலும் சிறந்த கவிதைகள் இன்னும் தமிழ் இலக்கியத்தில் எழுதப்படவில்லை. (more…)
கோ வாடிஸ்
– எஸ். சுரேஷ் –
“எங்க போற?”
இங்கர்சால்
இங்கர்சால் எனும் பெயர் பிராமண குடும்பங்களில் ரொம்பவே அபூர்வம். பெயர் பொருத்தமில்லை என்றாலும் இவனும் கொஞ்சம் அபூர்வமானவன் தான். காலையில் அவன் மரண செய்தியை அறிந்ததிலிருந்து வழக்கத்திற்கு மாறாக மூன்று நான்கு தடவை வயிறு கலக்கி வெளியே போனது. அவனுக்கும் என் வயதிருக்கலாம், இல்லை இரண்டோ மூன்றோ அதிகமாகக்கூட இருக்கலாம். சவுண்டு மாமா எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். ரேடியோ ஸ்டேஷனில் பணியாற்றியதாலோ இல்லை உச்ச ஸ்தாயியில் பேசுவாதாலோ அவருக்கு அந்த பெயரில்லை. சௌந்தரராஜன் எனும் இயற்பெயரின் சுருக்கம் தான், ஆனாலும் பொருத்தமான பெயர் சுருக்கம்.
மாமா தூரத்து உறவு, தீவிர நாத்திகர் ஆனால் கட்சிகளிலோ அமைப்புகளிலோ இருந்ததில்லை. தன்னை நாத்திகர் என பறைசாற்றிகொண்டதோ அதன் மகத்துவத்தை ஏற்க சொல்லி பிரசாரம் செய்ததோ கூட இல்லை. அவருடைய வடபழனி வீட்டில் பூஜை அறை கிடையாது. அவர் அமாவாசை தர்ப்பனமோ வருடாந்திர தெவசமோ செய்வதில்லை என்பதில் பொதுவாகவே குடும்பத்தில் எல்லோருக்கும் வருத்தம். பித்ரு சாபம், புத் நரகம் என்றெல்லாம் பலரும் அவரிடம் சொல்லும்போது அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்துவிட்டு புன்முறுவலுடன் சென்றிடுவார். மாமா நல்ல வாசகரும் கூட. கோபராஜூ ரமாச்சந்திரராவ் எனும் கோராவை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர் தான். an atheist with gandhi எனும் நூலை உளவியலில் பட்டபடிப்பு முடித்ததற்காக எனக்கு பரிசளித்தார். இளமையில் மாமாவின் தந்தை இறந்தபோது அவருடைய அம்மாவிற்கு சில அமங்கல சடங்குகள் செய்யவேண்டும் என பெரியவர்கள் சொன்னதை கேட்டு கொதித்து நாத்திகர் ஆகி பூணூலை அறுத்து எறிந்துவிட்டு அம்மாவை அழைத்துக்கொண்டு மெட்ராசுக்கு வந்தார் என ஒருமுறை அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறாள். நானும் அதையே செய்திருக்க வேண்டும் ஆனால் அன்று எனக்கு போதிய வயசு இல்லை. (more…)
