Author: பதாகை

அலமாரி – அருண் கொலாட்கர் (மொழியாக்கம்- காஸ்மிக் தூசி)

  காஸ்மிக் தூசி

The cuboard-Image

மஞ்சளடைந்த
பழைய செய்தித்தாள்
கொண்டு சேர்க்கப்பட்ட
கண்ணாடிச் சில்லுகள்

கதவுச் சட்டத்தின் செவ்வகம்
ஒவ்வொன்றும்
ஓரு திரள்கலையின்
படைப்பு

அடைப்புச்சட்டத்துள்
இருத்தப்படாமல்
கீழ்நோக்கி துருத்திக்கொண்டிருக்கும்
நிச்சயமற்ற சரிவகங்கள்

நெருக்கியடித்துக்கொண்டு
அடுக்கடுக்காக அலமாரி முழுக்க
நிறைந்திருக்கிறார்கள்
தங்கநிறக் கடவுளர்கள்

வெட்டப்பட்ட தலையங்கங்கள்
நித்திய வாலிப வாக்குறுதிகளின்
பின்னால் இருந்தபடி
எட்டிப்பார்க்கிறார்கள்

பங்குச்சந்தை நிலவர
பத்திகளுக்கு அப்பாலும்
பார்க்கலாம் நீங்கள்
தங்கநிற கடவுளர்களை

கஞ்சிப்பசையால்
கெட்டிப்பட்ட
கருத்துக்களத்தின் பின்னால்
தெரிகிறது ஒரு தங்கக் கை

அந்தக்கதவின் மீது
எதிர்பார்த்ததைப் போலவே
இயல்பாக இருக்கிறது
ஒரு பெரிய பூட்டு
***
அருண் கொலாட்கர் எழுதிய The Cupboard என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம் இது

பதாகை சிறுகதை போட்டி – 2015: பெறப்பட்ட சிறுகதைகளின் பெயர்ப்பட்டியல்

பதாகை சிறுகதை போட்டி – 2015க்கு பெறப்பட்ட சிறுகதைகளின் பெயர்ப்பட்டியல் (இதில் விடுபடல் இருப்பின் editor@padhaakai.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)-

அகத்திணை

அன்பு என்பதே தெய்வமானது

அதிசய மீன்

அழகிய தருணங்கள்

ஈன்ற பொழுதினும்

எங்க ஊரு பெருசுக

இரண்டு தலைமுறைகள்

இரண்டு தோசைகள்

இரட்டைக் கையுறை

காமத்தில் திளைத்த இரவு

காத்திருந்தவள்

கடலை நீந்திக் கட

கணக்கு

மாசாவின் கரங்கள்

மாலைப்பொழுதின் நிறம்

மன்மதராசா

மறு இணைவு

மூன்றாம் மழை

நாமே நமக்கு

நல்லார் பொருட்டும் பெய்யும் மழை

நல்லதோர் வீணை செய்தே

நட்ட கல்லும் பேசுமோ

நிகழ்தகவுகள்

பாட்டியும் பேத்தியும்

படம்

பிழை

சந்தை

சிதறல்

சுரேஷ் என்கிற அமுதா

சுழல்

தாலாட்டு

தடுத்தாட்கொண்ட கடவுளற்றவர்

உண்டி சுருக்குதல்

உயிர்

வண்ணத்துப் பூச்சிகளின் கோவில்

வட்டம்

விடுப்பு

விலை

விருது

யுக சந்தி?

அமேஸான் காடுகளிலிருந்து 11. இரண்டாம் இயேசு – மித்யா

மித்யா 

11. இரண்டாம் இயேசு

ஆலிஸின் கோர மரணத்தைக் கண்ட கிறிஸ்டோவால் துக்கத்திலிருந்து மீள முடியவில்லை. ஒரு வாரம் அவனுக்கு காய்ச்சல் இருந்தது. அவன் ஏதேதோ பிதற்ற ஆரம்பித்தான். காட்டுவாசிகள் அவனுக்குப் பலவித மூலிகைகளைக் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அவன் மீது அவை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அவன் பிதற்றிக்கொண்டே இருந்தான். ஒரு வாரம் கழித்து அவனுக்கு காய்ச்சல் சரியானது. ஆனால்கூட அவன் தினமும் ஏதோ பிதற்றிக்கொண்டே இருந்தான்.

திடீரென்று ஒரு நாள் அவன் பேசுவதை நிறுத்திவிட்டான். தினமும் குடிசைக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு காட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பல இரவுகள் அவன் தூங்கவில்லை. காட்டுவாசிகள் அவனுடன் பேச முயற்சித்தார்கள். ஆனால் அவனோ காது கேட்காதவன் போல் ஊமையாக இருந்தான். அவர்கள் எது கொடுக்கிறார்களோ அதை உண்டான். “இவனிடம் உடல் மட்டும்தான் இருக்கிறது. இவன் உயிரை அந்த வெள்ளைக்காரி எடுத்துச் சென்றுவிட்டாள்,” என்றான் ஒரு முதிய காட்டுவாசி. (more…)

புலி – மொஹிபுல்லா ஜெகம் (ஆப்கானிஸ்தானியச் சிறுகதை)

(ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த எழுத்தாளர் மொஹிபுல்லா ஜெகம் (Mohibullah Zegham) எழுதிய சிறுகதையின் தமிழாக்கம். இதன் ஆங்கில வடிவம், ரஷித் கட்டாக் (Rashid Khattak) எழுத்தில் Fiction Southeast என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்டது)

அன்று சந்தை நாள். ஒரு டஜன் சாக்கு மூட்டைகளில் உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டு குண்டூஸ் நோக்கி ஒரு டிரக்கில் புறப்பட்டேன். சந்தைக்குப் போய் வெகு காலமாகியிருந்தது. பரந்து விரிந்திருந்த ஷோரோ பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த டிரக் புழுதியை மேகங்களாய்ப் பரத்திக் கொண்டு விரைந்தது. மலையுச்சியில் இருக்கிறோம் என்பதை நம்ப முடியாதபடிக்கு பாலைவனம் தட்டையாக இருந்தது. ஒருமணி நேரம் வழியில் வேறெந்த வாகனத்தையும் பார்க்க முடியவில்லை.

மலையிலிருந்து குண்டூஸ் அருகில் இறங்கிக் கொண்டிருக்கும்போது ஆயுதம் தாங்கிய சில ஆட்கள் நிறுத்தச் சொல்லி ஒரு செக்பாயிண்ட்டில் சைகை செய்தார்கள். அவர்கள் வெல்வெட் துணியில் தைத்த நீண்ட ப்ரௌன் கலர் சட்டைகள் அணிந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் தன் நீண்ட தலைமுடியைப் பின்பக்கமாக வாரியிருந்தான், அதன்மேல் ஒரு கைக்குட்டையைக் கட்டிக் கொண்டிருந்தான். அவன் சிறிது நேரம் எங்கள் டிரக்கைச் சுற்றி வந்தான், அப்புறம் ஓரிடத்தில் நின்று வியர்த்து ஒழுகிய தனது நெற்றியை முழுக்கைச் சட்டையின் அழுக்கேறிக் கிடந்த கைப்பகுதியில் துடைத்துக் கொண்டான். (more…)

ஆலிஸின் பதிப்புப் பயணத்தின் சாகஸ நிகழ்வுகள் – அஜய்

அஜய் ஆர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஹார்பர் லீயின் “Go Set a Watchman” நாவல் வெளிவந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், அதன் உள்ளடக்கம் சார்ந்த விமர்சனங்களுக்கு இணையாக/ அதிகமாகவும்கூட, அதை “To Kill a Mockingbird” நாவலின் தொடர்ச்சியாக (sequel)  மட்டுமே அணுகிச்  செய்யப்படும் விமர்சனங்களும் உள்ளன. பல ஆண்டுகளாக மக்கள் மனதில் பதிந்துள்ள, அவர்கள் மிகவும் அன்பு செலுத்தும் பாத்திரங்கள் இன்னொரு பரிமாணத்தில் தோற்றமளிக்கும்போது ஏற்படும் ஏமாற்றம்/ கோபம் இந்த விமரிசனங்களில் வெளிப்படுகின்றன..

To Kill a Mockingbird” நாவலின் காலத்திற்குப் பிந்தைய காலகட்டத்தைக் கொண்டது, அதன் பாத்திரங்கள் இதிலும் வருகிறார்கள் என்பதைத் தவிர “Go Set a Watchman”  உண்மையான “தொடர்ச்சி/ sequel” அல்ல என்ற புரிதலே, உணர்ச்சிவசப்பட்டு விமர்சிப்பதை தடுத்து, தனி/ standalone அல்லது ‘companion piece’ என்ற அளவில் வாட்ச்மேன் நாவலின் குறைநிறைகளைச்  சமநிலையோடு அணுகச் செய்யும். . அதுவே நாவலுக்கு நியாயம் செய்வதாகவும் இருக்கும்

Go Set a Watchman” தான் ஹார்பர் லீயால் முதலில் எழுதப்பட்டு, பின்பு  பதிப்பாசிரியரின் ஆலோசனைகளின் பேரில், முற்றிலும் புதிய/ வேறுபட்ட நாவலான  “To Kill a Mockingbird“ஆக உருவாகி, அது வெளிவந்து  இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது மூலவடிவில் வெளிவந்துள்ளது என்பது பதிப்பு வரலாறு. ஒரு நாவல் முற்றிலும் வேறொன்றாக மாறும் ரசவாதத்தை இங்கு காண்கிறோம்.

எழுத்தாளர் ஒருவருக்கு எழுத ஆரம்பிக்கும்போது இருந்த இலக்கிற்கும், அவர் வந்தடையும் இடத்திற்கும் உள்ள வித்தியாசம், இறுதி வடிவை அடையும் வழியில்  ஏற்படும் திருப்பங்கள் என ஒவ்வொரு படைப்பின் பயணமும் தனித்துவம் கொண்டது.

book0-firstimage (more…)