ரயில் நிலயத்திற்கு தனியாக வருவது எப்போதும் போல் எனக்கு படபடப்பை அளித்தது. இதற்கான காரணம் இதுவரையில் எனக்குச் சரியாக புலப்படவில்லை. காரணங்களைப் பற்றி சிந்திக்கையில் ஏதேதோ நினைவுகள் கால வரிசையின்றி ஒரே சமயத்தில் கிளர்நதெழும். இது படபடப்பை மேலும் அதிகரிக்கும். வழியனுப்புவதறகு யாராவது கூடவே வந்தால் இம்மாதிரியான சிந்தனைகளை ரயில் கிளம்பும் வரையிலாவது ஒத்திப் போடலாம். ஆனால் இதை எல்லாம் வெளியே சொன்னால் கேலியும் சிரிப்பும்தான் மிஞ்சும். நாற்பது வயதில் ரயிலில் தனியாகப் போக பயம் என்று சொன்னால் யார் நம்புவார்கள். (more…)
Author: பதாகை
ஆரஞ்சு வண்ணம்
– ஸ்ரீதர் நாராயணன் –
பலவண்ணத்தில் பரப்பி வைக்கப்பட்டிருக்கிற
ஊதாங்குழல்களில்
ஆரஞ்சு வண்ண குழலை
பாய்ந்து பற்றியெடுக்கிறாள். (more…)
கிழவி
– காஸ்மிக் தூசி –
கிழவியொருத்தி
உங்கள் சட்டையை பிடித்துக்கொண்டு
கூடவே வருகிறாள்.
ஐம்பது பைசா கொடுத்தால்
குதிரைலாட கோயிலுக்கு
கூட்டிப்போவேன் என்கிறாள். (more…)
அரவிந்தனின் பயணம் நாவல்
“உனக்கு நெஜமாவே ஒரு விஷயம் வேணும்னா, அதுல நீ சீரியஸா இருந்தா அது உனக்குக் கிடைக்கும்” என்று ஸ்வாமிஜி ராமநாதனிடம் சொல்வது, அவனுக்கு அவ்வப்போது நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு விஷயத்தின் மீது பற்று கொண்டிருந்தால், எந்த இடர்பாடுகளையும் சந்திக்க முடியும் என்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்ப்பையே/ புறக்கணிப்பையே சந்திக்கும் ஒருவனின் பயணம் எப்படி இருக்கும் என்பதை ‘பயணம்’ நாவல் விவரிக்கிறது.
வீட்டிலிருந்து வெளியேறி ஸ்வாமிஜியின் ஆசிரமத்தில் ராமநாதன் சேர்வதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. நாவலின் களம் ஆசிரமமாக இருந்தாலும், ஆன்மிகம் என்றால் தவம்/ இறையை அடைய முயலுதல் என்ற தனி நபர் ஈடேற்றத்தை குறிக்கோளாக கொண்டது, என்ற பொதுவான புரிதலில் இருந்து சற்று விலகுகிறது. மக்களுக்கு சேவை செய்தல், அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், சமூகத்தில் சில நல்ல மாற்றங்களை உருவாக்குதல் இவற்றையே ராமநாதன் தன் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கிறான். (more…)
சந்தோஷ ஊற்றுகள்
– ஸ்ரீதர் நாராயணன் –
காலைக் கட்டிக்கொண்டு
தூக்கச்சொல்லும் பரிதவிப்பு,
தோளின் மீதேற்றிக்கொண்டதும்
விகசிக்கிறது பூரிப்பில்.
முதுகில் ஏற்றிக்கொண்டு
குதிரையோட்டம் ஓடும்போது
மகிழ்ச்சி கெக்கலிப்பாகிறது (more…)


