விமர்சனம்

கவியின் கண்- “இறைச்சிக்கும் உதவாதவர் நூறு கோடி”

எஸ். சுரேஷ்

இனி என்ன விற்பார்கள்?
– விஜயலட்சுமி

ஆற்றையும் காற்றையும் வெயிலையும் விற்கவும்
மழையையும் மண்ணின் துகள்களை விற்கவும்
பதினான்காம் காலையின் அழகை விற்கவும்
காலைப்பொழுதின் சப்த ஸ்வரங்களை விற்கவும்

அழைப்பு விடுக்கிறார்கள்! – வருக, உலகின்
பெரும் பணப்பை கொண்ட கனவான்களே –

நீல மலைகளை உங்களுக்காகத் தோண்டி எடுக்கவும்
அழகிய மரங்களைப் பிடுங்கி எடுக்கவும்
மகரமும் பனியும் குளிரும் உங்களுக்கு
மறந்து விடாமல் முடிந்து கொள்ளவும்

சலவை செய்த வெள்ளைச் சிரிப்புடன் நாட்டை
கூறு போட்டு விற்பதற்குக் காதலுடன் நிற்பவர்கள்
உரக்கக் கூவுகிறார்கள்- கேரளத்தைக் கூறு போடுங்கள்,
வெட்டி எடுங்கள் கசாப்பு கத்தியால்.

இனி விற்பனைக்கு இருப்பது – தம்மை வேறுபடுத்தும்
அடையாளங்களைக் கழுத்தில் தொங்க விட்டிருப்பவர்,
இறைச்சிக்கும் உதவாதவர் நூறு கோடி-
இவர்களை வாங்கிக் கொள்ள இனி யார் வருவார்?

மலையாளத்திலிருந்து தமிழாக்கம் – app_engine  (more…)

இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல்

பீட்டர் பொங்கல்

இவ்வாண்டு ந்யூஸ்டாட் பரிசு பெற்ற மியா கோடோ அளித்த நன்றியுரையின் தமிழாக்கம்

அன்பு நண்பர்களே,

இந்த விருதைப் பெற்றுக்கொள்வதில் நான், எனக்கு மிகப் பெரிய கௌரவம் அளிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஏதோ ஒரு எளிய சம்பிரதாய மதிப்புக்காக மட்டும் இப்படிச் சொல்லவில்லை. இதை உணர்வுபூர்வமாகச சொல்கிறேன்.

தனிப்பட்ட ஓர் எழுத்தாளனின் படைப்புக்குத் தரப்படுகிறது என்பதற்கும் அப்பால் இந்த விருது முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் இங்கே ஓக்லஹாமாவில், ஒவ்வொரு வருடமும், கொண்டாடும் விஷயம் இலக்கியத்தோடு நின்றுவிடுவதில்லை. ந்யூஸ்டாட் விருதைக் கொண்டு நாம் நம் உலகின் பண்பாட்டுப் பன்மையைப் போற்றுகிறோம், நம் ஒவ்வொருவரின் உள்ளும் இருக்கும் பன்மைப் பண்பாட்டைப் போற்றுகிறோம். அன்னியர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டப்படுபவர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான அரண்களாய் நம் தனிப்பட்ட அடையாளங்களும் தேசிய அடையாளங்களும் கோட்டைகள் போல் எழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில் பன்மைப் பண்பாட்டைப் போற்றுதல் மிக அவசியம். (more…)

எதனாலும் குடிமுழுகிப் போய்விடாது

கவியின்கண் – கலையொன்று
– எலிசபெத் பிஷப் –
 
இழப்புக் கலையில் தேர்ச்சி அடைவது கடினமல்ல;
தொலைந்து போகும் நோக்கம் நிறைந்தவை ஏராளம் உண்டு,
எதையும் இழப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போவதில்லை.

(more…)

ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்

 வெ. கணேஷ்

“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில், பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.

ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கியபடி வேகமாக நகரும் காமிரா; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை; விறகுவெட்டியின் மூச்சிரைக்கும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்துவிட முடிகிறது. (more…)

நவீன தேவதை கதைகள் சில

அஜய் ஆர்

robertcoover

அரக்கர்களை/ சூனியக்காரிகளை அழித்த பின்னர், நாயகன் இளவரசியை மணம் முடித்து இருவரும் “happily lived ever after” என்பது தேவதைக் கதைகளில் (பெரும்பாலான கதைகளில்கூட) முடிவாக உள்ளது. ஆனால் திரை விழுந்தபின், முப்பது நாள் மோகம் கடந்த பின் அவர்களின் அன்றாட வாழ்க்கை தொடர்ந்து அப்படியே மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கும் என்று சொல்ல முடியுமா? (more…)