விமர்சனம்

மேலெழும்பும் சிலர் – ஹெலன் டூயிவிட் சிறுகதையை முன்வைத்து

பாஸ்டன் பாலா

”உங்களுக்கு பொருட்டில்லாததை விற்கிறீர்கள். தேவடியாத்தனம் செய்யும்போது அது உடம்பு. பதிப்பிக்கும்போது, அது மூளை. மூளையை வைத்துதானே புத்தகம் எழுதுகிறோம்…”

ஆஃபீஸ் ஸ்பேஸ் (Office Space) படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் இலக்கியத்தரமாக எழுதினால், வாசகனை கொஞ்சம் யோசிக்க வைக்குமாறு புத்தகமாக உருவாக்கினால் எப்படி இருக்கும்? ஹெலன் டூயிவிட் எழுதிய மின்னல் தடிகள் (Lightning Rods) போல் இருக்கும். அந்தப் புத்தகம் குறித்த அறிமுக விமர்சனங்கள்தான் எனக்கு ஹெலன் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்தது.

அந்தப் புத்தகத்தின் கதை என்ன?

சந்தையிலே செல்லுபடியாகாத விற்பனையாளர் அறிமுகம் ஆகிறான். எதையும் சாமர்த்தியமாகப் பேசி ஒழுங்காக விற்கத் தெரியாதவன். வெட்டிப் பேச்சும் அழையா ஆலோசனைகளுமாக காலத்தைப் போக்குபவன். அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக மனிதவள மேலாளர்கள் கெடுபிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக புத்தம்புதிய சாதனத்தை அறிமுகம் செய்கிறான். அலுவலில், பாலியல் தொல்லைகளை அதிகரிக்கும் சாதனம் – அனைத்து கழிப்பறைகளிலும் பொருத்தி விட வேண்டும். இந்தப் பொருளை நிறுவி விட்டால் உடன் பணிபுரியும் பெண்களைப் புணரலாம். யார் புணர்கிறார்கள் என்று தெரியாது. அலுவல் அழுத்தங்களும் அடக்கி வைத்த ஆசைகளும் இந்த மாதிரி சாதனத்தை நிறுவுவதால் நீங்கும் என்று அந்த விற்பனையாளன் அமோகமாக சந்தையில் சொல்லி, ஜாம்ஜாமென்று பணம் புரட்டுகிறான்.

(more…)

கொலாட்கரின் ஜெஜூரி- 2, பராக்கு பார்த்தலின் புண்ணியங்கள் – அமித் சௌத்ரி தமிழாக்கம்

முந்தைய பகுதி

ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது என்பது, சுதந்திர தேசம் எனும் அதனினும் பெரிய வளர்கதையில், அற்ப, அவ்வப்போது சர்ச்சைக்குரியதாய் இருந்த, விளிம்புநிலைச் செயல்பாடு என்று எழுதியிருந்தேன். இந்த முனைப்புக்கு தீவிரத்தன்மை அளிக்கவும், ஆங்கிலத்தை நேசிக்கும் வாசகர்கள் மற்றும் இந்திய மொழி எழுத்தாளர்களில் கவிதையைக் காட்டிலும் மிக முக்கிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பரபரப்பாயிருந்தவர்களை  இயங்கச் செய்யவும், நிஸ்ஸிம் எஸகீல் முயற்சித்தார் எனினும் அது நல்ல நாளிலேயே கௌரவமான, ஆபத்தற்ற பேரார்வமாக மட்டுமே இருந்தது; மோசமான நிலையில், வெட்டி வேலையாக, ஏன், ஒரு துரோகச் செயலாகவும் இருந்தது. அலட்சியப்படுத்துவதாகவும், அற நிலைப்பாடு கொண்டதாகவும் தேசவெறி சார்ந்ததாகவும் இருந்த, கவிதைக்கு எதிரான கலவை நிலையை நிஸ்ஸிம் எஸகீல் விமரிசன ஆசாரத்தால் எதிர்கொண்டார், அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றார். ஆனால் விளிம்புநிலை முயற்சிகளுக்கும்கூட தமக்கேயுரிய உற்சாகங்களும், ஏமாற்றங்களும் ஆபத்துகளும் உண்டு.

இந்த உற்சாகங்களில் ஒன்று ஜஸ்ஸாவாலா, மெஹ்ரோத்ரா, கொலாட்கர், ஜீவ் படேல் முதலானவர்கள், புத்தகங்களைப் பதிப்பிக்கும் நோக்கத்தில்- அதிலும் குறிப்பாக, முதலில் தங்கள் கவிதைகளைப் பதிப்பிக்கும் நோக்கத்தில்-, கிளியரிங் ஹவுஸ் என்ற பதிப்பகத்தை 1976ஆம் ஆண்டு துவக்கியதுதான். கவிதை எழுதுவது போலவே, உபகலாசாரங்களில் பிற எதுவும் எப்படி முன்னெடுத்துச் செல்லப்படுகிறதோ, அப்படியே பதிப்புத்தொழிலும் அணுகப்பட்டது: நேசத்துடன், ஓரளவு தங்களுக்கான விஷயமாகவும் மீதம் பிற கவிஞர்கள் மற்றும் சக பயணியர்களின் பார்வைக்காகவும் இவர்கள் செயல்பட்டனர். குறிப்பிட்ட சில புத்தகக் கடைகளில் விற்பனை செய்ய நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன, நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என்று சந்தாதாரர்களுக்கும் புத்தகங்கள் அனுப்பப்பட்டன. அந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நான்கு புத்தகங்கள் இவை- படேலின் How Do you Withstand, Body; ஜஸ்ஸாவாலாவின் Missing Person; மெஹ்ரோத்ராவின் Nine Enclosures; ஜெஜூரி. இந்தப் புத்தகங்களின் முன் அட்டையையும் அச்சுருவையும் கொலாட்கர் வடிவமைத்திருந்தார்,- பெருவாரிச் சந்தையோடு அல்லாமல் உபகலாசாரங்களுக்கு மட்டும் உரியதாய் நாம் கருதும் இன்னொரு விஷயம் இது-, அவர் புத்தகங்களைக் கலைப்பொருட்களாகவே மாற்றியிருந்தார். (more…)

கொலாட்கரின் ஜெஜூரி, ஓர் அறிமுகம் – அமித் சௌத்ரி

(நியூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் கிளாசிக் பதிப்புக்கு அமித் சௌத்ரி எழுதியுள்ள ஓர் அறிமுகம்)

1976ஆம் ஆண்டில் ஜெஜூரி பதிப்பிக்கப்பட்டபோது என் வயது பதினான்கு. அதைப் பற்றி அடுத்த ஆண்டுதான் கேள்விப்பட்டேன். அப்போது அந்த நூல் காமன்வெல்த் கவிதைப் பரிசு வென்றிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வந்திருந்தது, அதனுடன் அருண் கொலாட்கர் பற்றிய ஒரு கட்டுரையையும் அந்தப் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. என் நினைவு சரியாக இருந்தால், அதன்பின் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கவிஞர், புத்தகம், மற்றும் மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள யாத்திரைத் தலமான ஜெஜூரி பற்றிய கட்டுரைகள் அந்தச் செய்தித்தாளில், வந்திருந்தன. அப்போது அதில் பார்த்த ஒரு புகைப்படத்தால்தான் கொலாட்கரின் தொங்கு மீசையும் நீண்ட தலைமுடியும் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும்.

இலக்கியம் என்ற ஒன்றே இல்லை என்பதுபோல் இப்போது கடந்த பத்தாண்டுகளாக பாவனை செய்து கொண்டிருக்கும் அந்தச் செய்தித்தாள், ஒரு கவிஞருக்காக அத்தனை நியூஸ்பிரிண்ட்டை அப்போது செலவு செய்தது என்பது இன்று அசாதாரண விஷயமாகத் தெரிகிறது; ஆனால், பம்பாயின் பண்பாட்டுச் சூழல், ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய கவிதைகளின்பால் அன்றெல்லாம், ஏறத்தாழ எதுவுமே யோசிக்காமல், வரையறைத்துக் கொள்ளாமல், நட்பு பாராட்டுவதாகத்தான் இருந்தது, தான் பொழுதுபோக்கு கேளிக்கைகளாகக் கொண்ட பலவற்றுக்கும் காட்டிய அதே இணக்க உணர்வுதான் இங்கும் அதற்கிருந்தது. (more…)

பூமணியின் அஞ்ஞாடி – 2: இருட்டில் நிகழும் மோதல்கள்

– என். கல்யாணராமன் –

கட்டுரையின் முந்தைய பகுதி – பூமணியின் அஞ்ஞாடி – 1: அறிமுகம்

தான் அஞ்ஞாடி எழுத நேர்ந்த சுவாரசியமான கதையைச் சொல்கிறார் பூமணி. அவர் குழந்தையாய் இருந்தபோது, கட்டை விரல் இல்லாத ஒரு முதியவரைத் தன் கிராமத்தில் ஒரு மரத்தடியில் பார்த்திருக்கிறார். அது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட்டு அவரிடம் விசாரித்திருக்கிறார். 1899ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, அருகிலிருந்த சிவகாசி டவுனுக்குள் கூட்டம் கூட்டமாக மக்கள் புகுந்து நாடார்களின் வீடுகளை சூறையாடியபோது தன் கட்டைவிரலை இழந்ததாக அந்த முதியவர் கூறியிருக்கிறார். நாடார்கள் தங்கள் ஊரைப் பாதுகாத்துக் கொள்ள பயங்கரமாய் பதிலடி கொடுத்திருக்கின்றனர். முதியவர் தன் கையிலிருந்த ஈட்டியை வீசுவதற்குள் நாடார்கள் எறிந்த கல் ஒன்று அவரது வலது கையைத் தாக்கி, அவரது கட்டைவிரலை நசுக்கி விட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறிய நிகழ்வு ஒன்றை நேருக்குநேர் எதிர்கொண்ட அனுபவம், சிவகாசி கலவரம்பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை பூமணியின் மனதில் தூண்டிற்று. (more…)

படிக்காத நான்கு புத்தகங்கள்

பாஸ்டன் பாலா

காட்டுப் பறவைகளுக்கு குளிர் காலத்தில் உணவு எளிதில் அகப்படுவதில்லை. நான் இருக்கும் வனாந்திரத்தில் குருவிகளும் மரங்கொத்திகளும் போதாதென்று சிவப்பு, நீலம் என எல்லா நிறங்களிலும் பட்சிகளைப் பார்க்க முடிகிறது. புள்ளினங்களைக் கவர்வதற்காகவே வீட்டின் கொல்லைப்புறத்தில் தீனி வைத்திருக்கிறேன். சிட்டுகளும் சிறகடித்து வரும். கொஞ்சம் கொத்தும். முதலில் சோதனைக்காக, நண்பர்களை அழைத்துச் சாப்பிடச் சொல்லும். அதன் பிறகு பக்கத்து வீட்டு அமுதசுரபிக்கு ஓடிவிடும். அங்கேயும் முகர்ந்தும் ஊர்ந்தும் உரசியும் சோதித்தபின் இன்னொரு கிளையைத் தேடிக் காணாமலேயே போய்விடும்.

இதையெல்லாம் காண்பதற்கு முன்பே, இப்படி புரட்டிப் பார்த்து சோதிக்கும் நிலை எனக்கும் வாய்க்கப் பெற்றிருந்தேன். காய்கறிச் சந்தையில் அரை கிலோ காரட் மட்டும் வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருப்பார்கள். முதலில் கண்ணில் பட்டவரிடம் ஐந்து கிலோவிற்கான விலை கேட்டு, கேரட்டைத் தொட்டுப் பதம் பார்த்து, பேரம் பேசி, அதன்பின் அந்தக் கடையிலிருந்து விலகி, நாலு கடை தள்ளி, மீண்டும் காரட் ‘கிலோ என்ன விலை’ என்று கேட்டு, ஆதியிலிருந்து அலசலைத் தொடங்குவதில்தான் இந்த சுகானுபவத்துக்கான அஸ்திவாரம் இடப்பட்டது. தொலைக்காட்சியில் தூர்தர்ஷனும் தூர்தர்ஷன் இரண்டாம் அலைவரிசையான மெட்ரோவும் மட்டுமே இருக்கப் பெற்றிருந்தாலும், அவை இரண்டையும் மாற்றி மாற்றி வேடிக்கை பார்ப்பதில் இந்த விளையாட்டு வளர்ச்சியடைந்தது. இப்பொழுது புத்தகக் கடையில் நூல்களை மேய்வதில் வந்து நிற்கிறது. (more…)