பிற

சாகித்ய அகாதமியின் மொழியாக்கச் செயல்திட்டம் குறித்து ஓர் அறிவிப்பு

இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்பவர்கள் குறித்து ஒரு தகவற் பெட்டகத்தை சாகித்ய அகாதமி அமைப்பு உருவாக்கி வருகிறது.  எந்த எந்த மொழிகளில் யார் யார் மொழிபெயர்க்கிறார்கள் என்ற விபரம், பயனர்களுக்கு வழங்கப்படும். இங்கு நீங்கள் பதிவு செய்து கொண்டால், மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கக்கூடும். வாழ்த்துகள்.

 

Translators - PaperAd 1-page1

 

நீங்கள் இப்போதே தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : nationalregistertranslators@gmail.com

செல்ஃபி சுப்புவும் பார் கவுன்சிலும்

கார்த்தி

selfie_subbu_barcouncil

செல்ஃபி சுப்பு போன இண்டர்வியூ

கார்த்தி

 

selfie_subbu_interview

கவிதையும் கேள்வியும்

கடந்த ஆறு வாரங்களாக றியாஸ் குரானா அவர்கள் பதாகையில் வாரம் ஒரு கவிதையும் எழுதி வந்திருக்கிறார். பதாகைக்குப் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார், பதாகையைப் புதிய தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

கவிதைகள்-

அதிகாலை ஒரு வெள்ளைக்கதவு

நினைவு தேன்கூடு

கறுப்புப் பெட்டி

தோன்றி மறையும் வர்ணங்களாலான படுக்கையறை ஒவியம்

Z – கனவில் நடிக்க ஆள் தேவை.

காத்திருப்பவருக்கும் காத்திருக்கச் செய்தவருக்கும் இடையில் பெய்த மழை

கட்டுரைகள்- 

கவிதையும் வாசக மனநிலையும்

கவிதையின் உண்மைகள்

கற்பனையும் மொழியும்

தமிழ் கவிதை வடிவம்

‘கவிதை மொழியைப் பெருக்குகிறது’

கவிதையின் நகர்வுகள் – இனி என்ன? 

கவிதை குறித்த அவரது கருத்துகள் மாறலாம், கவிதையின் வடிவம் மாறலாம், ஆனால் என்றும் மாறக்கூடாத நற்பண்புகள் அவரிடம்  உள்ளதை அண்மைய மாதங்களில் உணர்ந்தோம். உடல்நிலை உட்பட பல பிரச்சினைகளுக்கு இடையே பதாகையில் எழுதிய திரு றியாஸ் குரானா அவர்களுக்கு நன்றிகள்.

திரும்பப்பெறுதல்

Frigyes Karinthy

ஃப்ரிக்ஸ் கேரிந்தி (Frigyes Karinthy) ஹங்கேரிய எழுத்தாளர். ஜோனதான் ஸ்விஃப்ட், ஹெய்ன்ரிச் ஹெய்ன் மற்றும் மார்க் ட்வைன் போன்றோரின் எழுத்துகளை நவீன ஹங்கேரிக்கு மொழிமாற்றம் செய்ததன் மூலமாக அங்கதத்தை ஹங்கேரிக்கு கொண்டு வந்தவர். எல்லா தரப்பு வாசகர்களுக்குமான எழுத்தை கொண்டவர்.

Refund (கல்விக்கட்டணத்தை திருப்புதல்) அங்கத ஓரங்க நாடகம். பழைய மாணவனொருவன் தான் பயின்ற பள்ளிக்கூடத்திற்கு திரும்பி வந்து நிகழ்த்தும் கூத்துகளும், அதற்கு பதிலடியாக ஆசிரியர்களின் திட்டங்களுமாக, முடிவில் எவர் வென்றார் என்று ஆவலுடன் எதிர்நோக்க வைக்கும் நாடகம்.

(தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)

ஒரு மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் (Principal) தன்னுடைய அலுவலகத்தில் தட்டையான மேஜை முன் அமர்ந்திருக்கிறார். ஒரு பணியாள் நுழைகிறார்.

முத:- என்ன விஷயம்?

பணி:- வெளியே ஓராள் ஐயா. உங்களைப் பார்க்க வேண்டுமாம்.

முத [பின்னால் சாய்ந்ந்துகொண்டு நெட்டி முறித்தவாறு]:- நான் அலுவலக நேரத்தில் மட்டுமே பெற்றோர்களை பார்ப்பேன். அந்த குறிப்பிட்ட அலுவல் நேரம் அறிவிப்பு பலகையில் போட்டிருக்கிறது. அவரிடம் அதை சொல்லு.

பணி:- ஆமாம் ஐயா. ஆமாம் ஐயா. ஆனால் இவர் பெற்றோர் இல்லை ஐயா.

முத:- மாணவரா?

பணி:- அப்படியில்லை என்று நினைக்கிறேன். அவருக்கு தாடியெல்லாம் இருக்கிறது. (more…)